×

புரோக்கர்களால் உழைக்கிறவர்களுக்கு மரியாதை இல்லை காங்கிரசிலிருந்து பிரிந்த அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்க முடிவு: புதிய கட்சி தொடங்கிய மகாத்மா சீனிவாசன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து வரும் 4ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்த கையோடு, காங்கிரசிலிருந்து பிரிந்த அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து மதச்சார்பற்ற சோசலிச காங்கிரஸ் என்ற ஒரு கட்சியையே தொடங்கி விட்டார். இதுகுறித்து, அக்கட்சியின் தலைவர் மகாத்மா சீனிவாசன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  காங்கிரஸ் கட்சியில் மனித உரிமை பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தேன்.

கட்சியில் ஒரு சில மூத்த நிர்வாகிகளின் செயல்பாடுகள் எங்களுக்கெல்லாம் கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. பணம் போட்டு பணம் எடுக்குற முதலீடுகளாக தான் செயல்படுகிறார்கள். ராகுல்காந்தி மட்டுமே கட்சிக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறார். ஆனால் அவரை ஏமாற்றிக் கொண்டு செயல்படும் மூத்த தலைவர்கள் சிலரது நடவடிக்கைகள் அதிருப்தி தருவதாக உள்ளது. அதனால் தான் காங்கிரசில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பாதயாத்திரை, சைக்கிள் பயணம் சென்று ராகுல்காந்தியின் பெயர் புத்தகத்தில் இடம்பெற்ற எனக்கு மதுரை மேலூர் தொகுதியில் சீட் கிடைப்பதாக இருந்தது. அதை மாணிக்கம் தாகூர் தான் கடைசி நேரத்தில் தடுத்து விட்டார். இப்படி கட்சிக்காக உழைப்பவர்களை எல்லாம் ஓரம் கட்டும் வேலையை ஒரு கூட்டமே பார்த்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய தலைமை தவறி விட்டது.

இதனால் தான் ஹசீனா சையத், அமெரிக்கை நாராயணன், சி.ஆர்.சுந்தரராஜன் என முக்கிய நிர்வாகிகள் என ஒவ்வொரு செங்கலாக உதிர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு காங்கிரசில் இருந்து பிரிந்த அதிருப்தியாளர்களை எல்லாம் ஒருங்கிணைப்பது தான் எனது முதல் கட்ட பணி. இந்த கட்சி தொண்டர்களுக்கான காங்கிரசாக எனது கட்சி செயல்படும். காந்தி, காமராஜர், கக்கன் ஆகியோரின் கொள்ைக வழியில் புதிய கட்சியின் பணிகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Congress ,Mahatma Srinivasan ,Chennai ,Tamil Nadu ,Secular Socialist Congress ,
× RELATED மருத்துவ கல்லூரி பேராசிரியர்களுக்கு...