×

கிரெடிட் கார்டு பணம் செலுத்த கூடுதல் அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடெல்லி: கிரெடிட் கார்டு நிலுவை தொகையை திருப்பி செலுத்த, நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பிறகு 3 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கி புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கிரெடிட் கார்டு பயன்பாட்டில் தற்போதுள்ள நடைமுறைப்படி, கடைசி தேதி முடிந்து ஒரு நாள் தாமதமானாலும் வங்கிகள் அபராதம் வசூலித்து வருகின்றன.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட தேதி முடிந்து 3 நாட்கள் கடந்த பிறகே ஒரு கணக்கை நிலுவையில் உள்ள கணக்காக வங்கிகள் கருத வேண்டும். இந்த 3 நாட்களுக்குள் தொகையை செலுத்தினால், கூடுதல் அபராத கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்பதுடன், வாடிக்கையாளரின் கடன் தகுதி பாதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Reserve Bank ,New Delhi ,
× RELATED பெங்களூரு அரசு மருத்துவமனை...