பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கோடை ஆலங்கட்டி மழையின்போது, சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுற்றுச்சுவர் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இரு குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தை நேற்று காலை கர்நாடக மாநில லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். இந்த விவகாரத்தில் அரசு செயல் பொறியாளரை இடைநீக்கம் செய்ய முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இறந்த 7 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
