×

ஒடிசாவில் சர்ச்சை ஏற்படுத்திய விவகாரம் சகோதரியின் எலும்புக்கூடுடன் வந்த சகோதரருக்கு பணத்தை வழங்கிய வங்கி

புவனேஸ்வர்: வங்கி இருப்புத்தொகையை தர மறுத்ததால் சகோதரியின் எலும்பு கூட்டை வங்கிக்கு எடுத்துச்சென்ற சகோதரனுக்கு இறுதியாக வங்கி நிர்வாகம் பணத்தை வழங்கியது. ஒடிசா, கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜித்து முண்டா(50).பழங்குடி வகுப்பை சேர்ந்த இவரின் சகோதரி கல்ரா முண்டா. 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவர் இறப்பதற்கு முன்னரே, இவரது பிள்ளை மற்றும் கணவர் ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர். இதையடுத்து, ஜித்து மட்டும்தான் அவரது வாழும் ஒரே ஒரு உறவினராக இருக்கிறார்.

கல்ரா முண்டா, கிராமவங்கியில் கணக்கு வைத்திருந்தார். அதில் இருக்கும் ரூ.20,000 பணத்தை எடுக்க ஜித்து வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கி அதிகாரிகள் அந்த கணக்கு வைத்திருப்பவர் வரணும் இல்லன்னா சட்டப்பூர்வ வாரிசு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி பணத்தை கொடுக்க மறுத்துள்ளனர். இதில் கடும் ஏமாற்றமடைந்த அவர் இறந்து போன சகோதாரியின் எலும்புக்கூட்டை வங்கிக்கு நேரில் கொண்டு சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது வங்​கி​யின் மனிதாபி​மானமற்ற செயல் என பலரும் கண்​டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஒடிசா முதல்​வர் மோகன் சரண் மாஜி​ விசா​ரணைக்கு உத்​தர​விட்​டார். மேலும், காவல்​ துறை​யினரும் உள்​ளூர் அதி​காரி​களும் முண்​டாவை சமா​தானப்​படுத்​தினர், மேலும் அவரது கோரிக்கை நிறைவேற்​றப்​படும் என்​றும் அவருக்கு உறு​தி​யளித்​தனர். இந்நிலை​யில் ஒடிசா கிராமின் வங்கி, தனது எக்ஸ் தளத்​தில், ‘இறந்​தவர் நேரில் வர வேண்​டும் என்று வங்கி அதி​காரி​கள் தெரிவித்​ததாக கூறப்​படும் தகவல் தவறானது.

சட்​டப்​படி​யான ஆவணங்​கள் இல்​லாத​தால் பணத்தை வழங்க முடிய​வில்​லை. அந்த நபர் மது​போதை​யில் இருந்​த​தால் நடை​முறை​களை விளக்கி கூறி​யும் அவர் ஏற்​க​வில்​லை. தற்​போது அரசு அதிகாரிகள் வழங்​கிய வாரிசு சான்​றிதழின் அடிப்​படை​யில், 19,402 ரூபாய், 3 வாரிசு​தா​ரர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது’ என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து உள்​ளூர் மக்​கள் கூறுகை​யில், ‘கிராம பஞ்​சா​யத்​து தலை​வரிடம் விசா​ரித்​தாலே உண்மை தெரிந்​திருக்​கும்.

ஆவணங்​களுக்​காக ஒரு ஏழை மனிதரை இவ்வளவு தூரம் அலைக்​கழித்​தது வேதனைக்​குரியது’ என்றனர். இந்நிலையில், இந்த விவ​காரத்​தில், அவருக்கு உதவி​யாக 30,000 ரூபாயை​யும் வழங்க அதி​காரி​கள் முன்​வந்​தனர். மேலும், அரசு அதிகாரிகள் இறப்​பு சான்​றிதழை​யும் சட்​டப்​பூர்​வ வாரிசு ஆவணங்​களை​யும்​ ஜித்​து முண்​டா​விடம்​ வழங்​கினர்​.

* ஒடிசா சட்டப்பேரவையில் அமளி
ஒடிசா சட்டமன்றத்தில் ஜனநாயகத்தில் பெண்கள் பங்கேற்பு குறித்து விவாதிப்பதற்காக சிறப்பு அமர்வு நேற்று நடந்தது. இதில் எலும்புகூடு விவகாரத்தை காங்கிரஸ், பிஜேடி எம்எல்ஏக்கள் எழுப்பி மாநில அரசை விமர்சித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் பேசுகையில், ‘உணர்வற்ற ஒடிசா அரசு மக்களை முற்றிலுமாக கைவிட்டுவிட்டது. பழங்குடியின மனிதனின் துயரம் வேதனையானது.

ஒரு பெண்ணுக்குச் சேர வேண்டிய உரிமைகளைப் பெறுவதற்காக, அவரது மரணத்தை நிரூபிக்க, அவரது குடும்பத்தினரே எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்ததால்,ஒடிசா வெட்கித் தலைகுனிகிறது. ஒடிசாவின் வரலாற்றில் இத்தகைய மனிதாபிமானமற்ற ஆட்சி இதற்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை’ என்றார். இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்எம்ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags : Odisha ,Bhubaneswar ,Jithu Munda ,Keonjhar district ,Kalra Munda ,
× RELATED பெங்களூரு அரசு மருத்துவமனை...