×

சாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துகிறார் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: “பிரதமர் மோடி, சாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்த விரும்புகிறார்” என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: சரியாக ஓராண்டுக்கு முன், நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒட்டுமொத்த மக்களின் சாதி கணக்கீடு சேர்க்கப்படும் என மோடி அரசு அறிவித்தது.

பிரதமரின் இந்த வியத்தகு யு-டர்ன் அறிவிப்பு குறித்த அட்டவணை இதோ: ஜூலை 21,2021, மக்களவையில் பாஜ எம்பி ரஷா நிகில்(தற்போது அமைச்சராக இருப்பவர்) கேட்ட கேள்விக்கு, உள்துறை அமைச்சர் பதிலளித்தார். சாதிவாரியாக மக்கள் தொகையை கணக்கிட வேண்டாம் என ஒன்றிய அரசு கொள்கையாக முடிவு செய்துள்ளது என்றார். ஏப்ரல் 20,2025, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை பிரதமர் மோடி அறிவித்தார்.

அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் சொன்னபோது, அதை ஏன் நகர்ப்புற நக்சல் சிந்தனை என, பிரதமர் தனது மனதை மாசுபடுத்த ஏன் அனுமதித்தார் என்பதற்கான விளக்கத்தை அவர் இந்திய மக்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறார். தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி மோடி அறிவித்து ஓராண்டாகி விட்டது.

ஆனால், தற்போதுவரை எந்த செயல்முறையில், எப்படி மேற்கொள்ளப்படும் என்ற விவரங்களை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில் நிபுணர்களுடன் ஆலோசிப்பது ஒருபுறம் இருந்தாலும், மாநில அரசுகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதை தாமதப்படுத்த மோடி அரசு விரும்புகிறது. இவ்வாறு அடுக்கடுக்கான புள்ளிவிவரங்களுடன் குற்றம்சாட்டி உள்ளார்.

Tags : Modi ,Congress ,New Delhi ,General Secretary ,Jairam Ramesh ,
× RELATED பெங்களூரு அரசு மருத்துவமனை...