×

காங். பயிற்சி முகாம் ராகுல் பங்கேற்பு

தர்மசாலா: இமாச்சலப் பிரதேச மாநிலம் காங்க்ராவில் உள்ள குப்த கங்காவில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் தேசிய அளவிலான பயிற்சி முகாம் கடந்த 21ம் தேதி தொடங்கியது. இதில் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நகர்ப்புற மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை காங்க்ரா வந்தடைந்தார். இதன் பின்னர் குப்த கங்காவுக்கு சென்ற அவர் காங்கிரஸ் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Tags : Kang ,Rahul ,Dharmasala ,Gupta Ganga, Himachal Pradesh ,Congress ,Punjab ,Jammu and ,Kashmir ,Himachal Pradesh ,
× RELATED பெங்களூரு அரசு மருத்துவமனை...