×

விஜய் நாளை நாகை பயணம்? வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவில் தரிசனம்

நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி, நாகூர் தர்காவில் தரிசனம் செய்ய விஜய் நாளை (2ம்தேதி) நாகப்பட்டினம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. வாக்கு எண்ணிக்கை மே 4ம்தேதி நடைபெற உள்ள நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற விஜய் அங்கு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து சீரடிக்கும் சென்று வழிபாடு மேற்கொண்டார்.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கும், நாகூர் ஆண்டவர் தர்காவிற்கும் நாளை (2ம்தேதி) விஜய் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக நாகப்பட்டினம் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘வேளாங்கண்ணி பேராலயம், நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவில் விஜய் வழிபாடு நடத்த இருக்கிறார். தலைவர் விஜய்யின் பயணம் குறித்து தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளது. ஆனால் அவரது பயணத்திட்டம், நேரம் குறித்த தகவல்கள் எதுவும் வரவில்லை’’ என்றனர்.

Tags : Vijay ,Nagai ,Farangani Palace ,Nagore Targa ,Nagapattinam ,Velangani, Nagore Targa ,Tamil Nadu Assembly ,Tamil Nadu Victory Club ,
× RELATED சொல்லிட்டாங்க…