×

15 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் சில்மிஷம் டிரைவர் போக்சோவில் கைது பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த

தண்டராம்பட்டு, மே 1: தண்டராம்பட்டு அருகே பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பூவரசன்(33), டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பூவரசனின் மனைவி நேற்று முன்தினம் அதே கிராமத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்று அங்கேயே இரவு தங்கியுள்ளார். தனியாக இருந்த பூவரசன் அருகிலுள்ள ஒரு பகுதியில் வீட்டின் வெளியே வராண்டாவில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது சிறுமியை வீட்டிற்கு தூக்கிச் சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென கண்விழித்த சிறுமி அலறி கூச்சலிட்டார். இதனால் அக்கம் பக்கத்தினர் திரண்டு, சிறுமியை மீட்டனர். தொடர்ந்து நடந்த விவரங்களை சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் பூவரசனை சரமாரி தாக்கி, தானிப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து இளம்பெண்ணின் தாய், தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து பூவரசனை கைது செய்தனர். பின்னர் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Thandarambattu ,Poovarasan ,Tiruvannamalai district ,
× RELATED 15 வயது சிறுமியை தூக்கிச் சென்று...