- கர்நாடக
- டி. கே. சிவகுமார்
- பெங்களூரு
- காங்கிரஸ்
- சித்தாரமயா
- காங்கிரஸ் கட்சி
- சித்தராமையா
- D.K.
- சிவகுமாரின்
பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவை மாற்ற காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.கர்நாடகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தது. அப்போது அம்மாநில முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் சித்தராமையா கர்நாடக மாநில முதல்வராகவும், டி.கே.சிவகுமார் மாநில துணை முதல்வராகவும் பதவியேற்று கொண்டனர்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பின் பதவி மாற்றம் செய்யப்படும் என்ற உடன்பாட்டின் அடிப்படையில் டி.கே.சிவகுமார் சமாதானம் ஆனதாக கூறப்படுகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தற்போது மாநில துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமார், தனக்கு முதல்வர் பதவியை தர வலியுறுத்தி காங்கிரஸ் மேலிடத்தில் தொடர்ந்து முறையிட்டதாக கூறப்படுகிறது.
அண்மையில் டி.கே.சிவகுமார் ஆதரவு கர்நாடகா அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது துணை முதல்வராக உள்ள டி.கே.சிவகுமார் தனது ஆதரவாளர்கள் மூலம் மாநில முதல்வர் பதவியை கோரி தொடர்ந்து கடும் அழுத்தம் கொடுத்து வரும் சூழலில், தற்போது கர்நாடக மாநில முதல்வராக பதவி வகிக்கும் சித்தராமையாவை மாற்ற காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இது தொடர்பான அறிவிப்பு வரும் மே மாத இறுதியில் வெளியாகலாம் என் கூறப்படுகிறது.
