×

பள்ளி மாணவர்களுக்கு டிரோன் தொழில்நுட்ப பயிற்சி முகாம்

தியாகராஜநகர்,ஏப்.29: நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு 3 நாள் டிரோன் தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது. தொழில்முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டிரோன் தொடர்பான பயிற்சி முகாம் பாளை சேவியர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2ம் நாளான நேற்று டிரோன் இயக்க முறைகள் குறித்து செயல் விளக்கம் நடத்தப்பட்டது. டிரோன்களை மாணவர்களே இயக்கி பறக்க வைக்கவும் கட்டுப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த சிறப்பு பயிற்சி முகாமை திட்ட மேலாளர் சிவபாரதி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி, தாளாளர் ஆல்பர்ட் ஜோசப் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த பயிற்சி முகாமில் டிரோன் என்றால் என்ன டிரோன் தொழில்நுட்பங்கள் அவற்றின் இயங்கு முறைகள் எந்தெந்த துறைகளில் இவற்றை பயன்படுத்தி பயனடையலாம், ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான வேலை வாய்ப்புகள் போன்ற பல்வேறு விளக்கம் அளிக்கப்படுகிறது. 114 மாணவர்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்றனர். இன்று 3ம் நாளாக பயிற்சி முகாம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் விஜயகுமார், அறிவியல் ஆசிரியர் டெனிசன் உள்ளிட்டோர் இணைந்து செய்துள்ளனர்.

Tags : Thiagarajanagar ,Nellai ,Entrepreneurship Development Innovation Institute ,Palai Xaviers Higher Secondary School ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது