×

சமூக வலைதளம் மூலம் பழகி காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

விகேபுரம்,ஏப்.29: விகேபுரம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்ைலயை அடுத்த கீழ்ப்பாட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி மகன் சுடலை என்ற சுரேஷ் (26). கட்டிட தொழிலாளியான இவருக்கு சமூக வலைதளம் மூலம் விகேபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் அலங்காரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அபிநயா (22) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான பின்னர் சுடலை தனது மனைவி ஊரான சிவந்திபுரத்தில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் காலை குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுடலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விகேபுரம் போலீசார் விரைந்து சென்று சுடலை உடலை கைப்பற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விகேபுரம் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Vikepuram ,Suresh ,Chellapandi ,Kilpamtam ,Nellilay ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது