அமராவதி: விசாகப்பட்டினத்தில் ரூ.1.6 லட்சம் கோடியில் 1.5 GW திறன் கொண்ட நாட்டின் மிகப் பெரிய Data Centre-ஐ அமைக்க Reliance நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 935 ஏக்கர் நிலத்தை வாங்க ஆந்திர மாநில அரசிடம் அந்நிறுவனம் கோரியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே, அதே பகுதியில் ரூ.1.4 லட்சம் கோடியில் 1 GW Data Centre-ஐ அமைக்கும் பணிகளை Google தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
