×

எளிய வீட்டு வைத்தியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

*நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்களை நமது சிறிய உபாதைகளை தடுக்க வல்லது. மருத்துவ பலன்களை அறிந்து உபயோகிக்க நல்ல பலன் கிடைக்கும்.

*உப்பு, எலுமிச்சைச்சாறு, பெருங்காயம் மூன்றையும் கலந்து பல்துலக்கி வர பல்வலி வராது.

*பேரீச்சம்பழங்களை தினமும் ஊறவிட்டு, அந்த நீரோடு பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வர, ரத்த சோகை குணமாவதுடன், உடல் சோர்வும் நீங்கும்.

*தினமும் ஒரு கோவைப்பழம் சாப்பிட்டு வர, உடல் மெலிதல், நீரிழிவு நோய் போன்றவை கட்டுப்படும்.

*மகிழம்பூவை தண்ணீர்விட்டு சுண்டக்காய்ச்சி குடிக்க தலைவலி, தலை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

*உணவுடன் முள்ளங்கி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர கண்வலி, கண் எரிச்சல் குணமாகும்.

*வேப்பம் பூ பொடி, நெல்லிக்காய் பொடி, துளசிப் பொடி, நாவல் கொட்டை பொடி அனைத்தும் கலந்து சேர்த்து சாப்பிட்டு வர, சர்க்கரை நோய் குறையும்.

*நெல்லிக்காய், ஏலக்காய், ரோஜா இதழ்கள் இவற்றை நிழலில் காய வைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிட இருமல் குறையும்.

*மாதுளம் பூவின் சாறுடன் தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் குடித்து வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

*கரிசலாங்கண்ணி கீரை தலைமுடியை கருமையாக்குவதோடு நுரையீரல் வியாதிகளையும் குணமாக்கும்.

*பண்ணைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் செரிமான மண்டல உறுப்புகள் பலம் பெறும்.

*மாம்பூவை நீரிலிட்டு காய்ச்சி அந்த நீரால் வாய் கொப்பளிக்க பல் நோய்கள் தீரும்.

*புளியம்பூவை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட பித்தவாந்தி குணமாகும்.

*இரவில் சிறிது வெந்தயத்தை ஊறவைத்து நீராகரத்தில் போட்டு குடித்து வர உடல் சூடு தணிந்து, உடலுக்கு குளிர்ச்சி தரும்.

*வில்வ காய், பழம், வேர், பட்டை, தண்டுகள், இலைகள், பூக்கள் பழத்தின் ஓடு ஆகிய அனைத்துமே மருத்துவத்திற்குப் பயன்படுபவைகளாகவுள்ளன. இது நாட்பட்ட சீதபேதி, மலசிக்கலை குணப்படுத்தும்.
ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்.

*லவங்கப்பட்டை காரமும், மணமும் கொண்டது. இது சமையலுக்கும், மருத்துவத்துக்கும் பயன்படுகிறது. பல்வலி, வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, மூச்சுத்திணறல், மாதவிடாய் கோளாறு போன்றவற்றை குணமாக்கும்.

தொகுப்பு: – சுப்ரமணியன்

Tags : Saffron ,
× RELATED கர்ப்ப கால 10 நம்பிக்கைகள்… உண்மை என்ன?