ஜெய்பூர்: சன்ரைஸ் ஐதராபாத் அணிக்கு 229 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயம் செய்தது. ஜெய்பூரில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைஸ் ஐதராபாத் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
