சாயல்குடி, ஏப்.25: சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் கிராமத்தில் வடக்கு மறவர் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள்(86). இவர், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இளைஞர்கள் 4 பேர் கொண்ட கும்பல் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர்.
தண்ணீர் கொடுக்க திரும்பிய போது மூதாட்டி மாரியம்மாளை தாக்கி, கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலி, காதில் கிடந்த தோடு, மோதிரம் என மொத்தம் 7 பவுன் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். புகாரின் பேரில் சாயல்குடி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
