×

பிளாக் சரக்கு’ விற்றவருக்கு வலை

சிவகாசி, ஏப். 25: சிவகாசி அருகே பிளாக்கில் மது விற்றவரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி நாரணாபுரம் ரோட்டில் கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையின் அருகில் திருத்தங்கல் சிறுவர் பூங்கா தெருவை சேர்ந்த ராமர் மகன் மாயக்கண்ணன் என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்ய முயன்ற போது அவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அங்கு இருந்த 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மாயக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

 

Tags : Sivakasi ,East Police ,Sivakasi Naranapuram Road ,Ramar ,Thirudangal Children's Park Street ,Tasmak ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது