×

திருவனந்தபுரம் அருகே மதுபாரில் வாலிபர் குத்திக்கொலை 2 பேர் கைது

திருவனந்தபுரம், ஏப்.25; திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை பகுதியை சேர்ந்தவர் ராகுல்(24). நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அருகிலுள்ள கிள்ளி என்ற இடத்தில் உள்ள மதுபாரில் இவருக்கும், 2 வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்களில் ஒருவர் சாவியால் ராகுலின் விலா பகுதியில் சரமாரியாக குத்தினார். இதன்பிறகு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த ராகுலை அப்பகுதியினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து ராகுலை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காட்டாக்கடை போலீசார், உஸ்மான் (24) மற்றும் ராகுல்(18) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Madhubar ,Thiruvananthapuram ,Rahul ,Kattakadai ,Killi ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது