- வாகைக்குளம் கல்லூரி
- அன்னை தெரசா பொறியியல் கல்லூரி
- வாகைக்குளம்
- தூத்துக்குடி
- முதல்வர்
- ஜாஸ்பர் ஞானச்சந்திரன்
- ராஜலட்சுமி சுப்ரமணியன்
- சென்னை
- தயாரிப்பு உருவாக்குநர் ஜோகோ கார்ப்பரேஷன்
ஏரல், ஏப். 23: தூத்துக்குடி அருகே வாகைக்குளத்தில் உள்ள மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக சென்னை புராடக்ட் டெவலப்பெண்ட் ஜோகோ கார்ப்பரேஷன் ராஜலட்சுமி சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான கருத்துக்களை விவரித்து இன்றைய சூழ்நிலையில் வேலை வாய்ப்பு எப்படி உள்ளன என்பதை அறிந்து மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார். விழாவில் கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. டிவி புகழ் நவீன் பல குரல்களில் பேசினார். தொடர்ந்து மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர்கள் ஜார்ஜ், கிருஷ்ணகுமார், இயக்குநர்கள் ஜான் கென்னடி, முகமது சாதிக் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர் எபனேசர் பிரவீன் முத்துகிருஷ்ணன், கல்லூரி நிர்வாக அதிகாரி விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
