×

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது. கடந்த 8 மற்றும் 14ம் தேதி எல்லை தாண்டியதாக கைதான மீனவர்களை கிளிநொச்சி நீதிமன்றம் விடுவித்தது. விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்கள் மெருஹானா முகாமுக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர். முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் ஓரிரு நாட்களில் விமான மூலமாக தாயகம் அனுப்பி வைக்கப்படுவர்.

Tags : court ,Kilinochchi court ,Meruhana ,
× RELATED வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு நாளை விடுமுறை!