×

மல்லாங்கிணறு, காரியாபட்டியை சிறந்த பேரூராட்சிகளாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

 

காரியாபட்டி, ஏப்.22: திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு, காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சியில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில், காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பேரூராட்சி அனைத்து வார்டுகளிலும் பேவர் பிளாக், தெரு மின் விளக்கு, மழைநீர் வடிகால், குடிநீர் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மையங்கள், மின் மயானம், சத்துணவு மையங்கள், முழுநேர மற்றும் பகுதி நேர ரேசன் கடைகள் அமைத்து கொடுத்தோம்

Tags : Mallanginaru ,Kariyapatti ,Minister ,Thangam Thennarasu ,DMK ,Tiruchi ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது