×

சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா

 

திருப்புத்தூர், ஏப்.22: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் சித்திரைத் தேர் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும். இந்தாண்டிற்கான விழாவை முன்னிட்டு நேற்று காலை 8.30 மணியளவில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியருடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பலி பீடத்திற்கு பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு, கொடிமரத்தில் தர்பைப்புல் வைத்து சாற்றி காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் முதல் நாள் விழா தொடங்குகிறது

Tags : Chithirai festival ,Soumya Narayana Perumal temple ,Tiruputtur ,Thirukkoshtiyur ,Sivaganga ,Chithirai chariot festival ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது