×

மாவட்டம் முழுவதும் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது

தேன்கனிக்கோட்டை, ஏப்.22: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தளி தொகுதி உள்பட மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரசாரம் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. தளியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமச்சந்திரன், அதிமுக கூட்டணியில் பாஜ சார்பில் நாகேஷ்குமார், நாதக சார்பில் நரசிம்மன், தவாக சார்பில் அஜித், தவெக சார்பில் சுரேஷ் மற்றும் அண்ணா மக்கள் கட்சி சார்பில் ஜெயராம், 4 சுயேச்சைகள் உட்பட 10 பேர் போட்டியிடுகின்றனர். கடும் வெயிலிலும் வேட்பாளர்கள் கிராமம் கிராமமாக தேர்தல் பிரசாரம் செய்தும், ஆட்டோவில் தெருமுனை பிரசாரம், எல்இடி வேன்களில் டிஜிட்டல் பிரசாரம் செய்து வந்தனர். தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று மாலை 6 மணியுடன் தங்கள் பிரசாரத்தை முடித்துக் கொண்டனர். இதனால், கடந்த இரண்டு மாதங்களாக காணப்பட்ட பரபரப்பு அடங்கி மாவட்டத்தில் அமைதி திரும்பியது.

Tags : Thekkady ,Tamil Nadu Assembly ,Thali ,Ramachandran ,Communist Party of India ,DMK ,Nagesh Kumar ,BJP ,AIADMK ,
× RELATED சிறுமியை கடத்தியதாக வாலிபர் மீது புகார்