×

உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர் இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரசாரம்

மதுராந்தகம், ஏப்.22: உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர் நேற்று மாலை இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் படைசூழ அவர் ஆதரவு திரட்டினார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர் உத்திரமேரூர் பேரூரில் திறந்த ஜீப்பில் நேற்று மாலை நின்றபடி திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினரின் படை சூழ இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் வேட்பாளர் க.சுந்தர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு பேசுகையில், திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி கொடுத்துள்ளேன், மகளிர் தாங்கள் விருப்பப்பட்ட பொருட்களை வாங்கி கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2.0 ஆட்சியில் ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்க உள்ளார்.

அதனைப் பெற்று அருகில் உள்ள கடைகளுக்கு சென்று விருப்பப்பட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும், ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. ஆகவே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்து 6வது முறையாக சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், திமுக முன்னோடிகளும், இளைஞர்களும், மகளிர் அணியை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Uthiramerur ,K. Sundar ,Madhurantakam ,Secular Progressive Alliance ,Kanchipuram ,Uthiramerur… ,
× RELATED சித்திரை பிரமோற்சவ விழாவையொட்டி...