சாத்தான்குளம், ஏப். 22: சாத்தான்குளம் கல் குவாரியில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடி பகுதியில் உள்ள கல் குவாரியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சாத்தான்குளம் தேர்தல் பறக்கும்படை அதிகாரி சண்முகத்தாய் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர், நேற்று மாலை திடீரென சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஊழியரிடம் எந்தவித ஆவணங்களும் இன்றி ரூ.5 லட்சம் இருப்பது தெரிய வந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர், இது வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக கல் குவாரி ஊழியர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
