×

கடையநல்லூரில் ரூ.44 லட்சம் பறிமுதல்

கடையநல்லூர், ஏப்.22: கடையநல்லூரில் திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை அலுவலகத்தில் வைத்து பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து பறக்கும் படையினர் அலுவலகத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அங்கு ரூ.44 லட்சத்து 37 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதை கடையநல்லூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விபரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டு அங்கு ஒப்படைக்கப்பட்டது.

Tags : Kadayanallur ,Election Control Unit ,DMK ,Chellathurai ,Flying Squad ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது