×

சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு திரும்ப செல்லும்போது 50 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து மூதாட்டி, 6 மாத குழந்தை பலி

பாலக்காடு : இடுக்கி மாவட்டம் செருத்தோணி அருகே நாரகக்கான மலைப்பாதையில் கூத்தாட்டு குளத்தைச் சேர்ந்த சாரம்மா (65), நாரகக்கானம் டபிள் கட்டிங் பகுதியைச் சேர்ந்த ஜோதிஷின் மகள் நிதாரா (6 மாதம்), கூத்தாட்டு குளத்தைச் சேர்ந்தவர்களான ஜோளி, எல்தோஸ், ஜூலியட், சாஜன், சினு, ஏபல், டபிள்கட்டிங் பகுதியைச் சேர்ந்த ஜோதிஷ், இவரின் மனைவி சாலு, ஜோமல் ஆகிய 12 பேர் ஜீப் ஒன்றில் செயின்ட் தாமஸ் தேவாலயம் மற்றும் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்து விட்டு நேற்று முன்தினம் ஊர் திரும்பினர்.

அப்போது வளைவு சாலையில் ஜீப்பை ரிவர்ஸ் எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மூதாட்டி சாரம்மா, 6 மாத கை குழந்தை நிதாரா ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். ஜோளி, சாஜன், சினு, நிகாரா, எல்தோஸ், ஜூலியட் ஆகியோர் பாலாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 4 பேர் சிறியளவிலான காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து செருத்தோணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sharamma ,Kothatatu Pond ,Naragakarya Mountain Road ,Idukki District Cheruthoni ,Jothish ,Narakkanam Double Cutting ,Joliya ,Eli ,Altos ,Juliet ,Sajan ,
× RELATED தென் பெண்ணையாறு விவகாரத்தில்...