டெல்லி: கடந்தாண்டு ஏப்ரல் 27ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடக்கை மூலம் தக்க பாடம் புகட்டியது.
பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சுற்றுலா பயனிகளின் வருகை குறைந்தது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்த துயர சம்பவம் நிகழ்ந்து நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி “இந்தியா மறக்காது” என சமூக வலைதளத்தில் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில்;
மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும்போது, அதற்கான எதிர்வினை மிகத் தீர்மானமானதாக இருக்கும். நீதி நிலைநாட்டப்பட்டது. இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது.
When boundaries of humanity are crossed, the response is decisive.
Justice is Served.
India Stands United.#SindoorAnniversary #JusticeEndures #NationFirst pic.twitter.com/rtgYu9Hg11
— ADG PI – INDIAN ARMY (@adgpi) April 21, 2026
சில எல்லைகளை ஒருபோதும் மீறவே கூடாது. இந்தியா மறக்காது. என கூறப்பட்டுள்ளது.
