×

துவாக்குடி அருகே வாக்குச்சாவடி மையங்களில் ஏஎஸ்பி ஆய்வு

திருவெறும்பூர், ஏப். 19: துவாக்குடி வாக்குச்சாவடி மையங்களை திருவெறும்பூர் ஏஎஸ்பி ஆய்வு செய்தார். திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பெனாவாத் நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் வரும் 23ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்குரிய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பெனாவாத் மற்றும் துவாக்குடி இன்ஸ்பெக்டர் கமலஹாசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

Tags : ASP ,Dhuvakkudi ,Thiruverumpur ,Arvind Benawath ,Trichy ,Tamil Nadu… ,
× RELATED துவரங்குறிச்சி அருகே தைல மரக்காட்டில் தீ விபத்து