×

விருதுநகர் தொகுதியில் அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையங்கள்

 

விருதுநகர், ஏப். 21: இளைஞர்கள், மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்படும் என விருதுநகர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.ஜி.கணேசன் தெரிவித்தார். விருதுநகர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.ஜி.கணேசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளைஞர்கள், மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி, டெட், யுபிஎஸ்சி போன்ற அரசு போட்டி தேர்வுகளை எதிர் கொள்ளும் விதமாக இலவச பயிற்சி மையங்கள் தரமான ஆசிரியர்களுடன் அமைக்கப்படும். அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும்.

Tags : Virudhunagar ,AIADMK ,V.G. Ganesan ,Virudhunagar… ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது