×

வாக்குச்சாவடிக்கு 100 மீட்டருக்கு உள்ளே முகாம் அமைக்க கூடாது

 

சிவகங்கை, ஏப்.21: வாக்குப்பதிவு நாளன்று, சட்ட விதிகளின்படி வாக்குச்சாவடிகளுக்கு வெளியே தேர்தல் முகாம் அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வாக்குச்சாவடிகளுக்கு வெளியே தேர்தல் முகாம் அமைக்க சம்மந்தப்பட்ட உள்ளூர் நிர்வாகத்தின் முன் அனுமதி பெறப்பட்ட பின்னரே முகாம் அமைக்க வேண்டும். வாக்குச்சாவடியின் நுழைவாயிலில் இருந்து 100 மீ தூரத்திற்குள் எந்தவொரு தேர்தல் முகாமும் அமைக்கக் கூடாது. ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தாலும், எந்த ஒரு நுழைவாயிலில் இருந்தும் 100 மீக்குள் முகாம் அமைக்க அனுமதி இல்லை. ஒவ்வொரு முகாமிலும் ஒரு மேசை மற்றும் இரண்டு நாற்காலிகள் மட்டுமே இருக்க வேண்டும்.

Tags : Sivaganga ,Collector ,Porkodi ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது