×

எப்போதும்வென்றான் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

ஓட்டப்பிடாரம், ஏப். 21: எப்போதும்வென்றான் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். எப்போதும்வென்றான் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் வேல் மணிகண்டன் மனைவி மகாலட்சுமி (24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில் மகாலட்சுமி கடந்த சில காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. உடல்நலப் பாதிப்பால் மனமுடைந்த மகாலட்சுமி, நேற்று முன்தினம் இரவு இரவு வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த எப்பொதும்வென்றான் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகாலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மகாலட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், கோவில்பட்டி ஆர்டிஓ மேல் விசாரணைக்கும் பரிந்துரை செய்யபட்டுள்ளது.

Tags : Aivamveeran ,Ottapidaram ,RTO ,Mahalakshmi ,Vel Manikandan ,Katunayakkanpatti South Street ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது