×

புனித சவேரியார் ஆலயத்தில் தூய லூர்து அன்னை கெபி விழா தேர்பவனி

விருதுநகர், ஏப். 20: விருதுநகர் பாண்டியன் நகர் புனித சவேரியார் ஆலயத்தில் தூய லூர்து அன்னை கெபி விழா நடைபெற்றது. விருதுநகர் பாண்டியன் நகர் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயமான புனித சவேரியார் ஆலயத்தில் உள்ள தூய லூர்து அன்னை கெபி விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அன்னையின் கெபி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாலையில் ஆலய பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலியும் மறையுறையும் நடைபெற்றது.

திருப்பலியில் தூய லூர்து அன்னை செய்த அற்புதங்களை சாட்சிகளாக கூறினார்கள். தொடர்ந்து தூய லூர்து அன்னை திருஉருவம் மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட மின் அலங்காரத் தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகு வர்த்திகளை ஏந்திக்கொண்டு அன்னையின் மன்றாட்டு ஜெபங்களை பாடிக்கொண்டு சென்றார்கள்.

இதில் விருதுநகர், பாண்டியன் நகர், சவேரியார் நகர், கே.கே.எஸ்.எஸ்.என் நகர்,காந்தி நகர், முத்தால் நகர், அண்ணா நகர், அஞ்சல் அலுவலர் குடியிருப்பு, புது தெரு, அம்பேத்கார் தெரு, ரயில்வே காலனி, விருதுநகர் டவுன் பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாண்டியன்நகர் பங்குத்தந்தை லாரன்ஸ் அடி தலைமையில் இறைமக்கள் செய்திருந்தனர்.

 

 

Tags : Mother of Pure Lourdes Kebi Ceremony ,Temple of Saint Saveriyar ,Derhavani ,Virudhunagar ,of Our Lady of Lourdes ,Holy Saviar Temple ,Pandian Nagar, Virudhunagar ,Pure Lourdes Mother Kebi Ceremony ,Saint Saveryar Temple ,Catholic Christian Temple ,Virudhunagar Pandian Nagar ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது