×

ஆறுமுகமங்கலம் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுப்பேன்

 

ஏரல், ஏப். 20: ஆறுமுகங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மூன்று போக விவசாயம் நடைபெறுவதற்கு இங்குள்ள குளத்தை தூர்வாரி அதிகளவு தண்ணீரை சேமித்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என வை. தொகுதி தவெக வேட்பாளர் அன்னை விஜி சரவணன் பிரசாரத்தில் உறுதியளித்தார்.
வைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளர் அன்னை விஜி சரவணன், நேற்று ஏரல் அருகேயுள்ள அண்ணாநகர், அரசன்குளம், அரியபுரம், கணபதிசமுத்திரம், ஆறுமுகமங்கலம், லெட்சுமிபுரம், கலுங்கடியூர், குளக்கரையடியூர், சண்முகபுரம், ஆலடியூர், கரையடியூர், கொற்கை, அக்கசாலை, கொடுங்கனி, கொற்கைமணலூர், சென்னல்மாநகரம், தீப்பாச்சி, மாரமங்கலம், அகரம், சம்படி காலனி, இடையர்காடு, காவல்காடு, தளவாய்புரம், கோவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று விசில் வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Tags : Arumughamangalam ,Eral ,Thaveka ,Annai Viji Saravanan ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது