×

உரிய ஆவணங்களின்றி மினி லாரியில் கொண்டு சென்ற ரூ. 55 ஆயிரம் பறிமுதல்

 

நெல்லை, ஏப். 20: வீரவநல்லூர் அருகே நேற்று அதிகாலை உரிய ஆவணங்கள் இல்லாமல் மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.55 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை தடுக்க தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பறக்கும் படையினரும் ஆங்காங்கே வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட வீரவநல்லூர், புதுக்குடி பகுதியில் அதிகாரி சிவகுருநாதன் தலைமையில் போலீசார் சுடலைமணி மற்றும் ரமேஷ் ஆகியோர் இடம்பெற்ற தேர்தல் பறக்கும் படையினர், நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

Tags : Nellai ,Veeravanallur ,Nellai district ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது