ஆரல்வாய்மொழி, ஏப்.20: தோவாளை தெக்கூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண பண்டாரம். இவரது மகன் முத்து முருகன் (52). பூ கட்டும் தொழிலாளி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். மகன் சென்னையில் படித்து வருவதால் மனைவி ராஜேஸ்வரியும் அவருடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்தநிலையில் முத்து முருகன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வரவில்லை. இதனால் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் சந்தேகமடைந்து அவரை தேடிவந்த நிலையில் தோவாளை சானலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது அது முத்து முருகன் தான் என்பதை அப்பகுதியை சேர்ந்த மக்கள் உறுதிபடுத்தினர்.
