நாகர்கோவில், ஏப்.20: டாஸ்மாக் கடைகள் தொடர் விடுமுறையால் மதுபானங்கள் மொத்தமாக கொள்முதல் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், போலீசார்
கண்காணித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 21ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்கள் (21,22,23ம் தேதிகள்) மூடப்படுகிறது.
