×

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

அம்பை,ஏப்.19: பாபநாசம் பணிமனைக்கு சொந்தமான பேருந்து மணிமுத்தாறிலிருந்து அம்பை நோக்கி சம்பவத்தன்று கொண்டிருந்தது. அப்போது அயன் சிங்கம்பட்டியில் பேருந்துக்காக பயணிகள் காத்திருந்தனர். தொடர்ந்து அங்கு வந்த பஸ் நின்றுகொண்டிருந்த பயணிகளை ஏற்றி விட்டு புறப்பட்டு சென்றது. அந்த சமயத்தில் பின்னால் ஓடி வந்த வாலிபர் பேருந்து பின்புறத்தில் தட்டி நிறுத்துமாறு கூறினார். ஆனால் ஓட்டுநர் நிறுத்தாமல் பேருந்தை இயக்ககியதாக தெரிகிறிது. இதனால் ஆத்திரமடைந்த அயன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த வேம்பு மகன் சுரேஷ் தனது செல்போனை தூக்கி எறிந்துள்ளார். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இதுகுறித்து பேருந்து நடத்துனர் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ஜெய்னுலாப்தீன் அளித்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ambai ,Papanasam Workshop ,Manimuthar ,Ayan Singampatti ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது