- தூத்துக்குடி
- தினேஷ்
- ஜேம்ஸ்
- ஜே.ஜே. நகர்
- தலமுத்து நகர்
- காத்தர்வேல்
- சந்தானமுத்து
- கோத்தனார் காலனி
- பச்சைப்பெருமாள் அய்யனார்
- செல்வம்
தூத்துக்குடி,ஏப்.19: தூத்துக்குடி தாளமுத்துநகர் ஜேஜே நகரை சேர்ந்த ஜேம்ஸ் மகன் தினேஷ் (24). இவரும், கொத்தனார் காலனியை சேர்ந்த சந்தணமுத்து மகன் கதிர்வேல் (24), செல்வம் மகன் பச்சைபெருமாள் அய்யனார் (21) ஆகியோர் நண்பர்கள் ஆவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினேஷின் தங்கை குறித்து அய்யனார் அவதூறாக பேசினார். இதனை தினேஷ் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் மூவரும் அங்குள்ள டி.சவேரியார்புரம் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் இருவரும் சேர்ந்து தினேஷை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
