×

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

விளாத்திகுளம், ஏப்.19: விளாத்திகுளம் அருகே வாகன சோதனையின்போது முறையான ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமிதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சூரங்குடி கடற்கரை பகுதியில் வாகன சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சூரங்குடியைச் சேர்ந்த தாமரை என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 800 முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Vilathikulam ,Flying Squad ,Deputy Area Development Officer ,Sumitha ,Surangudi beach ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது