×

தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

 

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். ‘இது தேர்தல் காலம்தானே, இவர்கள் கவனம் அதில்தான் இருக்கும், நாம் டெல்லியில் சைலண்டாக தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறை செய்து விடலாம்’ என்று மட்டும் நினைக்கவே நினைக்காதீர்கள். நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டை பார்க்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, தொகுதி மறுவரையறை குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று கடிதம் எழுதிருந்தார். இதையடுத்து, தென் மாநிலங்கள் ஒரே குரலில் ஒன்றுபட்டு, கூட்டாட்சியின் உண்மையான தத்துவத்தை நிலை நிறுத்துவோம்.

உரிமைகளைப் பாதுகாக்கவும், வருங்கால சந்ததியினருக்கு சமத்துவ எதிர்காலத்தை உறுதி செய்யவும் ஒன்றுபடுவோம்” என தொகுதி மறுவரையறை குறித்து கடிதம் எழுதிய தெலங்கானா முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

Tags : Dimuka M. ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Minister ,Tamil Nadu ,Delhi ,
× RELATED தொகுதி மறுவரையறை குறித்து கடிதம்...