×

கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை தமிழ்நாட்டின் சுயமரியாதையை விட்டுத் தரமாட்டேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

வேலூர்: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

பரப்புரையில் முதல்வர் கூறியதாவது:

இந்திய விடுதலைக்கான புரட்சி துவங்கிய வேலூருக்கு நான் வந்திருக்கிறேன். நாம் யாருக்கும் அடிமை இல்லை என முழங்கிய இந்த மண்ணில் இருந்து டெல்லியின் ஆதிக்கத்திற்கு எதிராக தீர்ப்பு எழுத உங்கள் ஆதவரை கேட்டு வந்திருக்கிறேன்.  விழுந்து கிடந்தால் விடியல் இல்லை என்று உணர்த்திய மண் வேலூர். வேலூர் மண்ணில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு கேட்டு வந்துள்ளேன்.

தமிழ்நாட்டின் பாதி பகுதியை சுற்றி வந்துவிட்டேன். ஒவ்வொரு நாளும் இரண்டு மாவட்டங்களில் நான் பரப்புரை செய்து லட்சக்கணக்கான மக்களை சந்திக்கிறேன். இது நம்ம காலம், இறங்கி ஆடுங்கள் தலைவரே என்று சொல்கிறார்கள். எப்படிப்பட்ட நிலையில் நாம் தேர்தலை சந்திக்கிறோம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பசியும் வறுமையும்தான் மக்களின் வாழ்க்கை நிலையாக இருந்தது. அளவோடு பெற்று வளமாக வாழுங்கள் என்று குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்தார்கள். கிராமங்கள் முதல் கோட்டை வரை உதயசூரியனுக்கே ஆதரவு.

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாடு பாஜகவுக்கு மட்டும்தான் இன்சார்ஜ்.  வாய்க்கொழுப்போடு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேசி வருகிறார். மரியாதை கொடுத்தால்தான், திரும்ப மரியாதை கிடைக்கும். தமிழர்கள் அறிவானவர்கள், சுயமரியாதை உள்ளவர்கள். எங்கள் தன்மானம் மீது கை வைத்தால் டெல்லியின் ஆணவத்துக்கு எங்களின் கடும் பதிலடியை தருவோம். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் இல்லை என நினைவித்துவிட வேண்டாம்; அவர்களின் முழு உருவமாக நான். கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை தமிழ்நாட்டின் சுயமரியாதையை விட்டுத் தரமாட்டேன்.

பிரதமர் மோடி அவர்களே.. நெருப்போடு விளையாட வேண்டாம். பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு தனது இறுதி எச்சரிக்கையை கொடுத்துவிட்டது. பியூஷ் கோயல் நாவை அடக்கி பேச வேண்டும். நாட்டின் பிற மாநிலங்களில் சிறுபான்மையின மக்கள் ஆபத்துகளை, அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் ஒவ்வொரு சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு திமுகதான் காரணம். தமிழ்நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை திராவிட மாடல் ஆட்சி உறுதி செய்துள்ளது என முதல்வர் பேசினார்.

 

Tags : Tamil Nadu ,PM ,K. Stalin ,Vellore ,Tamil Nadu Assembly elections ,Dimuka ,First Minister ,Chief Minister ,K. ,Stalin ,
× RELATED கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை...