காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக பழனி போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று திருப்பெரும்புதூர் நகராட்சிக்குட்பட்ட கட்சிப்பட்டு பகுதியில் அதிமுக வேட்பாளர் பழனி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொதுமக்கள் சிலர் அதிமுகவிற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம். அதிமுக தோல்வி அடையும் என்று கூறியதால் இதை தாங்கிக் கொள்ளாத அதிமுகவினர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவன செய்தியாளரை ஆத்திரத்துடன், ஓடி வந்து அடிக்க முற்பட்டனர்.
இதைக் கண்ட அதிமுக வேட்பாளர் பழனி அதிமுகவினரை தள்ளிவிட்டு ஓடி வந்து செய்தி சேகரித்த செய்தியாளரை அடித்து தாக்கி கையை பிடித்து முறுக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது
அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறியதால் திருப்பெரும்புதூர் அதிமுக வேட்பாளர் பழனி செய்தியாளரை அடித்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதால் திருப்பெரும்புதூரில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என்று திருப்பெரும்புதூர் பகுதி மக்கள் செய்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது

