×

அரிசி பாயசம்

தேவையானவை:

பச்சரிசி அரிசி – கால் கப்
பால் – அரை லிட்டர்
சர்க்கரை – 1 கப்
முந்திரி, திராட்சை – தேவைக்கு
நெய் – தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசியை நன்கு அலசி சுத்தம் செய்துவிட்டு, 15-20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர், அரை லிட்டர் பாலில் அரிசி நன்கு குழையும் வரை வேகவைக்கவும். பின்னர், சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 5-10 நிமிடம் கொதிக்கவிடவும். பின்னர், நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.
குறிப்பு: பாயசம் கெட்டியாக மாற, சிறிதளவு தேங்காய்த்துருவல் அல்லது கன்டன்ஸ்ட் பால் (condensed milk) சேர்க்கலாம்.
பலன்கள்: அரிசி பாயாசம், உடலுக்கு உடனடி ஆற்றல், செரிமானம் மற்றும் எலும்பு வலிமைக்கு தேவையான புரதம் மற்றும் கால்சியத்தை வழங்கும் ஒரு சத்தான பாரம்பரிய இனிப்பாகும். இது பசியைத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கவும், வயிற்றுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.

Tags :
× RELATED சப்போட்டா பழ கேசரி