×

ஸ்ட்ராபெர்ரி குச்சி ஐஸ்

தேவையானவை:

ஸ்ட்ராபெர்ரி பழங்கள்- 2 கப்
சர்க்கரை- 3/4 கப்
தண்ணீர் – 1/2 கப்
குச்சி ஐஸ் அச்சு – 1.

செய்முறை:

ஸ்ட்ராபெர்ரி பழங்களை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். 6 துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். மீதம் இருக்கும் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளுடன் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும். குச்சி ஐஸ் அச்சில், தனியாக எடுத்து வைத்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை போடவும். அரைத்த கலவையை அதன் மேலே ஊற்றி நிரப்பவும். இதை 3 மணி நேரம் ப்ரீசரில் வைக்கவும்.

Tags :
× RELATED சப்போட்டா பழ கேசரி