- அஇஅதிமுக
- திட்டக்குடி
- அமைச்சர்
- சிவ
- கணேசன்
- கடலூர் மாவட்டம்
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- முருகுமாரன்
- சட்டமன்ற உறுப்பினர்
- Katumannarkoil
திட்டக்குடி, ஏப். 13: கடலூர் மாவட்டத்தின் 9 தொகுதியில் திட்டக்குடியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அமைச்சர் சிவெ. கணேசன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் கட்டுமன்னார் கோயில் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்த முருகுமாறன் திட்டக்குடி திடீர் வேட்பாளராக தொகுதி மாறி களமிறக்கியுள்ளனர். இதனால் உள்ளூர் நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர். நாளெல்லாம் இந்த தொகுதியில் அடி, உதை வாங்கி கட்சி நடத்த வேண்டும். ஆனால் வேட்பாளர் மட்டும் வெளியூரில் இருந்து போடுவார்களா? என்ன நியாயம் என கொதிக்கின்றனர்.
உள்ளூரை சேர்ந்த 13 பேர் அதிமுக தலைமையிடம் விருப்ப மனு செய்திருந்தும், ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. திட்டக்குடியை சேர்ந்த 5 நபர்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கட்சி தலைமை முருகுமாறனை களமிறக்கியிருப்பது, லோக்கல் அதிமுகவினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அவருக்கு மறைமுகமாக ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2016க்கு பிறகு இத்தொகுதியில் மீண்டும் அதிமுக, திமுக நேரடியாக போட்டியிடுகிறது. இது போன்ற சூழலில் முருகுமாறனுக்கு லோக்கல் அதிமுகவின் ஆதரவு இல்லாதது, பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், வெளியூர்க்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முருகுமாறன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காலம், காலமாக அதிமுகவுக்கு கொடி பிடித்தும், அதிமுகவை கட்டி காத்த எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
வேட்பாளர் தேர்வில் கட்சி தலைமை உரிய ஆலோசனை நடத்தாது, அதிமுகவில் உட்கட்சி பூசலையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் கட்சி தலைமை அறிவித்துவிட்டதே வேறு வழியில்லை என தேர்தல் வேலை செய்கின்றனர். ஆனால் மற்றொரு தரப்பு நாம் ஏன் இவருக்கு வேலை செய்ய வேண்டும் என ஒதுங்கி போகிறது. இதனால் அதிமுகவுக்கு மீண்டும் இத்தொகுதியை கைப்பற்றுவது என்பது இயலாத காரியம்தான், என்றனர்.
