×

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடியவர் கைது

உளுந்தூர்பேட்டை, ஏப். 10: உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எம்.குண்ணத்தூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி பழனியம்மாள் (55). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு உடல்நிலை சரியில்லாததால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்து 15 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து களமருதூர்போலீசார் இதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (38) என்பவரை கைது செய்து 12 பவுன் நகை மற்றும் ரூ.16 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Ulundurpet ,M.Kunnathur ,Palaniammal ,Ezhumalai ,Ulundurpet Government Hospital ,
× RELATED வாக்குச்சாவடிக்குள் அத்துமீறல்...