×

கோர்ட் வளாகத்தில் மெகா சுகாதார பணி

திருச்சி, ஏப். 12: திருச்சி கோர்ட் வளாகத்தில் மெகா சுகாதார பணியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தொடங்கி வைத்தார். திருச்சி கோர்ட் வளாகத்தில் மெகா சுகாதாரப் பணிகளை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிரிஸ்டோபர் நேற்று தொடங்கி வைத்தார். சுகாதார பணியில் 450க்கும் மேற்பட்ட கோர்ட் ஊழியர்கள் கலந்து கொண்டு வளாகத்தை சுத்தம் செய்தனர். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் கோர்ட் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.

இந்நிகழ்வில் தூய்மை பணியில் கோர்ட் ஊழியர்கள் மட்டுமின்றி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சாமிநாதன், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட் நீதிபதி புவியரசு, மகிளா கோர்ட் நீதிபதி சண்முகபிரியா, குடும்ப நல கோர்ட் நீதிபதி வெங்கடேசன், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை கோர்ட் எண்-2ன் நீதிபதி கார்த்திகா உட்பட சார்பு நீதிபதிகள் உரிமையியல் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

 

Tags : Trichy ,District Principal Sessions Judge ,District Principal Sessions ,Judge ,Christopher ,
× RELATED மணப்பாறையில் வாக்களர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி