×

‘ஜனநாயகன்’ லீக் விவகாரத்தில் எல்.முருகனுக்கு தொடர்பா?.. அண்ணாமலை காட்டம்

 

கோவை: கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:‘ஜனநாயகன்’ திரைப்படம் வெப்சைட்டில் லீக்கானது எங்களுக்கும் வருத்தம் அளிக்கிறது. அதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆனால் இந்த விவகாரத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனைத் தொடர்புபடுத்தி பேசுவது வன்மத்தின் உச்சம். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் பல பேரின் உழைப்பு, ரத்தம் அதில் உள்ளது. எந்த விஷக்கிருமிகள் அதனை செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : L.A. ,Democratic ,Murugan ,Annamalai Katham ,KOWAI ,FORMER BAJA ,ANNAMALAI ,BAJA ,VANATHI SINIVASAN ,NORTH ASSEMBLY CONSTITUENCY ,Democrat ,The League ,
× RELATED உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு