- ஒட்டன்சத்திரம்
- தேர்தல் விழா
- தமிழ்நாடு எஸ்
- பெரிய விழா
- ஒட்டன்சதிராம் காந்திநகர்
- சட்டமன்றத் தேர்தல் 2026
ஒட்டன்சத்திரம், ஏப். 9: ஒட்டன்சத்திரம் காந்திநகரில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2026ல் அனைவரையும் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் திருவிழா, தமிழ்நாட்டின் பெருவிழா, எதிர்காலம் ஏற்றம் பெற வாக்களிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஸ்வேதா, வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா, சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன், சமுதாய அமைப்பாளர் பாஸ்கர் சேதுபதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
