×

நத்தம் அருகே மது விற்றவர் கைது

நத்தம், ஏப். 9: நத்தம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வம், எஸ்ஐ கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நத்தம் அருகே பரளி- தேத்தாம்பட்டியில் அரசமரத்தடியில் அதே பகுதியை சேர்ந்த நாச்சம்மாள் (56) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாச்சம்மாளை கைது செய்து, அவரிடமிருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Tags : Natham ,Inspector ,Tamilselvam ,SI Karthikeyan ,Natham… ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழு அறை